Tuesday, March 8, 2011

எப்படி இருந்த நாங்க‌ இப்படி ஆயிட்டோம்





அன்று

கழகத்தின் நிரந்தர தலைவர் அவர்கள் திமுகவையும் அதன் தலைவரையும் வாய்மணக்க புகழ்ந்ததும், ஜெவின் ஆட்சி இந்துத்துவா ஆட்சி என்றும், ஜெயலலிதா ஒரு பாஜகவின் பினாமி என்றும் தினகரனுக்கு தலைவர் அளித்த பேட்டி...


தொடர்ந்து

கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி சோப்பு போட்ட காட்சி


இன்று

அம்மா...அம்மா.. என 3 மாசம் காத்திருந்து காத்திருந்து கடைசியில் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் கோபால் பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் காட்சி


கலைஞர் சிறையில் அடைத்தார் என நக்கீரனுக்கு பேட்டியளித்த காட்சி


கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆச்சி. ஆனால் வளைந்து நெளிந்து குழைந்து விழுந்து தவழ்ந்து புகழ்ந்து இகழ்ந்து மகிழ்ந்து....என்னத்த சொல்ல பச்சை அரசியல்வியாதி ஆகிவிட்ட இவர்களையா இந்த சமுதாயம் ஆதரிக்கப் போகிறது?? மக்களே சிந்திப்பீர்..

Sunday, March 6, 2011

வைகோ தியரியா? சைக்கோ தியரியா?


வைகோ தியரி என்பது என்ன? என்பதை மிக சிம்பிளாக புரிந்து கொள்ள உதாரணம், ஒரு திருடன் திருடுகிறான். அவனைப் பிடித்து மக்கள் தர்மஅடி கொடுத்து விட்டு, "ஏன்டா இப்படி எல்லாரையும் சேர்த்துக் கேவலப்படுத்துற" எனக் கேட்ட போது அவன் சொன்னானாம் நானாவது 10 ரூபாய் தான் திருடுனேன், அவனைப் பாருங்க,அவன் 50 ரூபாய் திருடிவிட்டான்,அப்படின்னா அவனும் கேவலப்பட்டவனா? என சொல்வது போலத்தான் மமகவினர் வைக்கும் வைகோ தியரியும். நீ மானங்கெட்டுப் போய் 3சீட்டுக்கு ச‌முதாயத்தை அடகுவைத்து விட்டாயே! உனக்கு கொஞ்சம் கூட சூடு,சுரனை கிடையாதா எனக்கேட்டால், அதற்கு வைகோவைப் பாருங்கள் அப்படின்னா அவரும் மானங்கெட்டவரா எனக்கேட்கிறார்கள்.

அவர்கள் எடுத்து வைக்கும் சொத்தை வாதம் இது தான்


"கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35தொகுதிகள் பெற்றார் வைகோ. இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6 தொகுதிகள் பெறவேண்டும். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4தொகுதிகளைத் தான் பெற்றார். அப்படியாயின் வைகோ மானமிழந்து விட்டாரா?"


இது தான் வைகோ தியரி. வைகோ 2006 ல் 35 தொகுதிகளை மனமார ஏற்றுக்கொண்டார். அதேபோல 2009 தேர்தலில் 4 தொகுதிகளையும் மனமார பெற்றுக்கொண்டார். அதுமட்டுமின்றி அவர் எந்த நிலையிலும் நான் என் சமுதாய மானம் காக்கப்போகிறேன் என சொல்லவில்லை. ஆனால் மமகவினர் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம், தமிழக அரசியலில் இருக்கும் ஒரு சீட்டுக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான். நல்லவேள நாமெல்லாம் கொஞ்சம் உசாரா இருக்கோம். இல்லாட்டா, பாத்தீங்களா! நாங்க ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்து அதிலே வெற்றியும் பெற்று இப்போது 3 சீட்டு வாங்கி நம் சமுதாய மானத்தைக் காத்துவிட்டோம் என சொன்னாலும் சொல்லியிருப்பார்கள். இவர்களிடம் ரொம்பத்தான் உசாரா இருக்கனும் போல, தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும். இப்போது வைகோ தியரிக்கு வரலாம். வைகோ மனமார இரண்டு வகை சீட்டுக்களையும் ஏற்றுக்கொண்டார்.


ஆனால் ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என கிளம்பிய போர்படை(?) கலைஞரிடம் நடத்திய பல கட்டப்பேச்சி வார்த்தையில் (என்னத்த கருமம் பேச்சிவார்த்த, 2 சீட்டு கேட்டு கலைஞரை இம்சை படுத்தியது தான்) கலைஞர் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதைவைச்சாத்தி விட்டார். ஊரெல்லாம் பயணம் சொல்லி கடைசியில் ஹஜ்ஜிக்கு போக விசா கிடைக்காமல் இருந்தவருக்கு தலையில் துண்டுபோட்ட பெரிய ஹசரத் வழியைக்காட்டி சென்னையிலே ஹஜ் செய்ய வைத்தது போல, இனம் இனத்தோடு சேரும் என்ற ரீதியில் வீராப்பாய் பேசி சரத்துகுமார், கிருஷ்னசாமி என லட்டர்பேடுகளோடு லட்டர்பேடாக தனித்து நின்று இவர்கள் பெற்ற‌ வாக்குகளைக் கண்டு அன்றைக்கு நரசிம்மராவ் இருந்தால் கூட தரையிலே உருண்டு புரண்டு சிரித்திருப்பார்.


ஆக இவர்கள் ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்தவர்கள். குறைந்தபட்சம் 2 சீட்டாவது தந்து எங்கள் மானத்தை காப்பாத்துங்கள் என கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி கடைசியாக நிராயுதபாணியாக 4 சீட்டில் நின்று மானம் காத்தார்கள் இந்த மாவீரர்கள். ஆக இவர்கள் குறைந்தபட்சம் ஒப்புக்கொண்டது 2 சீட்டு. மனமார இவர்களே தேர்ந்தெடுத்து நின்றது 4சீட்டு. ஆக வைகோ தியரிப்படி குறைந்தபட்சம் 2 அதிகபட்சம் 4.

வைகோ தியரிப்படி

சட்டமன்றம் X 6 = சீட்டுகள்

அல்லது

நாடாளுமன்றம் /6 = சீட்டுகள்

2006 தேர்தலில்

35 சட்டமன்றம் / 6 = 5.83 அதாவது 6 நாடாளுமன்றம்

ஆனால் 2009 தேர்தலில்

4 நாடாளுமன்றம் X 6 = 24 சட்டமன்றம்

ஆக மொத்தம்

சட்டமன்றக்கணக்கில்

35‍ – 24 = 11 வித்தியாசம்

நாடாளுமன்றக் கணக்கில்

6‍ – 4 = 2 வித்தியாசம்

ஆனால் உங்கள் கணக்குப்படி

போட்டியிட்ட‌ 4 தொகுதிகளுக்கு

4 நாடாளுமன்றம் X 6 = 24 சட்டமன்றம்


அல்லது ஒரு சீட்டு அவமானத்தை துடைத்து மானம் காக்க கடைசியாக கெஞ்சிக்கெஞ்சி கேட்ட 2 சீட்டு கணக்குக்கு

2 நாடாளுமன்றம் X 6 = 12 சட்டமன்றம்

அட போனா போகுது வழக்கமாய வழங்கும் ஒரு சீட்டு கலாச்சாரத்தின் படி

6 தொகுதிகளாவது பெற்றுத்தொலைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வாங்கிய 3 சீட்டுக்கு வரும் ரிசல்ட் வெறும் அரை சதவிகிதம் தான்.



இப்படி ஒரு மோசமான காரியத்தை செய்து விட்டு இவர்கள் வைகோ தியரியைச் சொல்லி வைக்க,அதை நாம் இப்போது +2 படிக்கும் பையன் கணக்கு பரீட்சை எழுதுவது போல வாத்தியாருக்கே விளக்க வேண்டியதாக இருக்கிறது. அதான் சொல்றது படிக்கும் போதே ஒழுங்கா படிக்கனும் என்று. இல்லாவிட்டால் இந்த மாதிரி தான் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும். ஒருவேளை போலி டாக்டர்கள் போல இவரு போலி வாத்தியாரா இருப்பாரோ? தெரியவில்லை.

என்னமோ நடத்துறாங்க பாடம், அட ஒன்னுமே புரியல மேடம்ங்கிற கதயா தான் இருக்கு.

ஏற்கனவே இருந்தத சுத்தம் பண்ணப் போறேன்னு சொன்னவன் அத இன்னும் கொஞ்சம் நாரடிச்ச கதயா, இன்னும் சொல்லப்போனா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு குளுக்கோஸ் ஏற்றப் போனவன் அங்கே ஓடிக்கொண்டிருந்த குளுக்கோஸ் வயரையும் அறுத்து விட்ட கதையா இந்த சுய நலக்கூட்டம் இருந்ததையும் கெடுத்து விட்டு வந்திருக்கிறது. வழக்கமாக 4 அல்லது 5 சீட்டு பெறும் முஸ்லீம் லீக் கூட இவர்களின் மானங்கெட்டத் தனத்தால் அவர்களுக்கும் 3 சீட்டே வழங்கப்பட்டு விட்டது.


இவர்கள் தான் மானம் காக்க வந்தவர்களாம்!!! இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல???
free counters