Saturday, March 5, 2011

கோவணத்தை இழந்த மானம் காக்கும் ஸ்பெசலிஸ்ட்


உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா:

தமிழில் ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா”

இவர்களை தற்போது நினைத்தால் இந்தப்பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது. தி.மு.க அணியில் தந்த ஒரு எம்.பி சீட்டை நாங்கள் வாங்க மாட்டோம். எங்களுக்கு சமுதாய மானம் காப்பதுதான் முக்கியமே தவிர, இந்த சீட்டுக்கள் தேவையில்லை என வீராப்பு பேசியவர்கள் தற்போது அதைவிட குறைவான சட்டமன்ற தொகுதிகளை பெற்று கேவலப்பட்டுள்ளார்கள் என்றால் உள்ளதையும் இழந்து நிற்கும் இவர்களை என்னவென்பது.

கோவணத்தை இழந்த மானம் காக்கும் ஸ்பெசலிஸ்ட்:

கோவணம் கட்டியிருந்த ஒருவன் இன்னொருவனிடத்தில் தனக்கு உடுத்த துணியில்லை. எனக்கு மானம் தான் முக்கியம். எனவே எனக்கு உடுத்த, எனது மானம் காக்க அழகான ஒரு வேட்டி வேண்டும் என்று கேட்டானாம். அதற்கு வேட்டிவைத்திருந்தவனோ என்னிடத்தில் வேட்டி இருந்தாலும் அதை நான் உனக்குத்தரமாட்டேன். என்னிடத்தில் உள்ள அரைக்கால் டவுசரை வேண்டுமானால் தருகிறேன் என்று சொல்ல, அதை மறுத்த இந்த மானம் காக்கும் பேர்வழி எனக்கு வேட்டிதான் முக்கியம், எனக்கு மானம்தான் முக்கியம் நீ தரும் அரைக்கால் டவுசர் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி அவனிடத்தில் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டானாம்.



அரைக்கால் டவுசர் போய் அம்மனமான கதை :

அரைக்கால் டவுசர் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி ரோஷத்தோடு வந்தவனுக்கு உண்மையிலேயே மான ஈனம் இருக்குமேயானால், சூடு சொரணை இருக்குமேயானால், வெட்கம் என்ற உணர்வு என்று ஒன்று இருக்குமேயானால் இவன் வேறு எவனிடத்திலாவது சென்று வேட்டியை வாங்கியிருக்க வேண்டும் அல்லது தானாக தனித்து நின்று வேட்டியை தயார் செய்து இருக்க வேண்டும். வேட்டிக்கு வக்கற்ற இந்த கோவணம் உடுத்திய பேர்வழி இன்னொருவனிடத்தில் சென்றானாம். அவனிடத்தில் மானத்தை பற்றி பேசிய இந்த

மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட், வேட்டியை வாங்குவதற்கு பதிலாக கட்டியிருந்த கோவணத்தை கழற்றிக்கொடுத்துவிட்டு வந்தால் எப்படி கேவலமாக இருக்குமோ அதுபோன்றுதான் தற்போது மானம் காக்க புறப்பட்ட இந்த ம.ம.கட்சியின் நிலை உள்ளது என்பதை யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மமகவும் வாழைப்பழமும்


ம.ம.க வினருக்கு வழைப்பழச் சின்னம் ஞாபகமிருக்கிறதா?

மமக வினர் தற்போது அதிமுக விடத்தில் மூன்று சீட்டுகளை வாங்கிக்கொண்டு கேவலப்பட்டு நிற்கும் வேளையில் தங்களது அந்த கேவலத்தை மறைப்பதற்கு பயங்கரமான பில்டப்புகளை கொடுத்து வருகின்றனர்.

பில்டப் நம்பர்: 1

20 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் அரசியல் அரசியல் அரங்கில் எழுச்சியாம் (?)

மேற்கண்டவாறு தங்களது முதல் பில்டப்பை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

சீட்டுக்காக நாங்கள் எத்தகைய கேவலத்தனத்தையும் அனுபவிக்கத்தயார் என்று இந்த அளவுக்கு கீழ்நிலையில் இறங்கிவிட்டு தற்போது அதிமுக விடத்தில் 3 சீட்டுகளை வாங்கிவிட்டு அது மாபெரும் எழுச்சி என்று கூறுகின்றார்களே! இவர்களுக்கு சென்ற தேர்தலில் வாழைப்பழ சின்னத்தில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டாரே அந்த சகோதரரை ஞாபகப்படுத்துகின்றோம்.

இவர்கள் தங்கள் இயக்கம் தமிழகம் முழுக்க கொடிகட்டி பறக்கின்றது(?) என்று கூறிக்கொண்டு 3 சீட்டுகளுக்காக தங்களது மானத்தை அடகுவைத்து நிற்கும் இவ்வேளையில் கடந்த தேர்தலில் காயிதே மில்லத் அவர்களின் பேரன் தாவூத் மியாகான் அதிமுக அணியில் தனிஆளாக இருந்து ஒரு தொகுதியைப்பெற்று தனிச்சின்னத்தில் அதாவது வாழைப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். அப்படியானால், இவ்வளவு பெரிய(?) பேரியக்கமாக இருந்த்து கொண்டு 3தொகுதி பெற்று கேவலப்படுவதே மாபெரும் எழுச்சி என்றால், தனியொரு ஆளாக இருந்து தாவூத் மியாகான் அவர்கள் அதிமுக அணியில் ஒருதொகுதியை பெற்றாரே அது மாபெரும் மகத்தான எழுச்சி என்று ஏன் இவர்கள் சென்ற தேர்தலில் சொல்லவில்லை. தாவூத் மியாகானையும் வாழைப்பழ சின்னத்தையும் மமகட்சியினர் மறந்திருந்தாலும், மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.


பில்டப் நம்பர் 2:

3தொகுதியை பெற்று மகத்தான எழுச்சி கண்ட மமகவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிகின்றதாம்!

இதுதான் அவர்களது இரண்டாவது பில்டப்.

இந்த அளவிற்கு மானம் கெட்டு கேவலப்பட்டு மரியாதையை விற்றுவிட்டு நிற்கிறீர்களே என சமுதாய மக்கள் இவர்களை காரித்துப்புவது இவர்களுக்கு வாழ்த்துக்களாகவும், பாராட்டுக்களாகவும் தெரிந்தால் நாம் என்ன செய்வது?

பில்டப் 3:

தமிழகத்தில் 3 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியையும் அதிமுக எங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

தங்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதாக சொல்வதிலும் இவர்கள் எத்தகைய பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்பதை நாம் சமுதாய மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்கட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள் தங்களது பத்திரிக்கையில் அதிமுக வுடனான ஒப்பந்தப்பத்திரத்தை வெளியிடவில்லை. வெளியிட்டால் இவர்கள் சொல்லும் பொய்கள் உலகுக்கு அம்பலமாகிவிடும் என்பதால் அதை மறைத்துள்ளனர்.

அந்த ஒப்பந்தப்பத்திரத்தை நாம் வெளியிடுகின்றோம். இவர்கள் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி தங்களுக்கு ஒதுக்குவதாக அதிமுக தலைமை சொன்னது என்று வாயாலேயே தான் வண்டி ஓட்டியுள்ளார்களே தவிர! அந்த ஒப்பந்தப் பத்திரத்தையில் அதைப்பற்றி எந்தவிதமான எழுத்துமானமும் இல்லை. அதிலும் இவர்கள் கேவலப்பட்டுதான் நிற்கிறார்கள். அந்த விஷயத்தையும் மறைத்துவிட்டுத்தான் 3+1 = 4 என்று தாங்களும் மடையர்களாகி தாங்கள் மடையர்களானதை மறைக்க மக்களையும் மடையர்களாக்கப்பார்க்கிறார்கள். சமுதாயம் இந்த துரோகிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்

பரிசுக்கேள்வி:

அதிமுகவுக்கு மமகவுக்கும் ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டு அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு. இந்த உடன்பாட்டுப் பத்திரத்தில் பாண்டிச்சேரியில் ஒரு சீட் மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற வாசகத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், பாண்டிச்சேரியை சுற்றிப்பார்க்க மூன்று நாட்கள் இலவச பயணப்படியும் வழங்கப்படும்.

குறிப்பு: இந்தப் போட்டியில் பொதுமக்கள்,மமகவின் தொண்டர்கள், மமக சார்பாக மானம் காக்க கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பரிசு உடனடியாக வழங்கப்படும்.

Tuesday, March 1, 2011

தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகம்


பதவி ஆசையெல்லாம் அறவே கிடையாது, எங்களுக்கு சமுதாய மானமே முக்கியம் என நம் சமுதாயத்தின் மானம் காக்கப்புறப்பட்ட நம் முன்னாள் சகாக்கள் இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு வாய்கிழிய சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் நமது சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது, எனவே தான் அதை மீட்க களமிறங்கப்போகிறோம் என களமிறங்கியவர்கள் கேவலப்பட்டு நிற்கிறார்கள். காலங்காலமாக முஸ்லீம் லீக் அல்லது இஸ்லாமிய கட்சிகள் வாங்கி வந்த 4 அல்லது 5சீட்டுக்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ண புறப்பட்டிருக்கும் புதிய படை தான் இந்த கழகம். கலைஞரிடம் அவமானப்பட்டு விட்டு இப்போது ஜெயலலிதாவிடம் பல்லைக்காட்டி 3 சீட்டு பெற்றிருக்கும் கழகத்தினர் யாருக்காக உழைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. சமுதாயத்தை அடகுவைத்து எங்களின் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இவ்வளவு பிரதி நிதித்துவம் போதும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மமகவினர். அப்படியே 3 இடங்களில் போட்டியிட்டாலும் அது நிச்சயமாக எதிர்கட்சியில் முஸ்லீம்கள் நிறுத்தப்படும் தொகுதியாகத்தான் இருக்குமே தவிர இவர்கள் போய் புதிதாக முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி விடப்போவதில்லை.


தூய தவ்ஹீத் கொள்கை தான் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடை, எனவே நீங்கள் இருக்கும் வரை நாங்கள் கல்லா கட்டமுடியாது, எனவே உங்கள் ஓரிறைக் கொள்கையை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறிவிடுங்கள் என அன்றைக்கே தன் சுய நலத்திற்காக தவ்ஹீது கொள்கையை கைகழுவிய இந்தக் கூட்டம் இன்றைக்கு சமுதாய மானம் காக்க தேர்தல் நிதி கேட்டு நிற்கிறது. ஒரு நல்ல‌ அமைப்பின் செயல்பாட்டுக்கு நிதி தரலாம், ஏதேனும் பள்ளிவாசல் அமைப்பதற்கு நிதி தரலாம், மக்களுக்கு பயன் தரக்கூடிய காரியங்களுக்கு நிதி தரலாம்,சமுதாய நலன் சார்ந்த போரட்டங்களுக்கு நிதி தரலாம். ஆனால் ஒரு தனி நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி தருவதற்கு மக்களுக்கு என்ன வந்தது? மக்களையெல்லாம் கேணயர்களாக்கி மடையர்களாக்குவதை யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு உங்களின் பல நாள் லட்சியத்தை அடைவதற்கு நாங்கள் ஏன் நிதி தர வேண்டும்? சாதாரணமாக கேட்டுப்பார்ப்பீர்கள், தராவிட்டால் உங்கள் வழக்கமான கட்டப்பஞ்சாயத்து பாணியில் மிரட்டிக்கேட்பீர்கள். இதெல்லாம் மக்களின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் தேர்தலில் நிற்க ஆசையிருந்தால் உங்கள் சொந்த சொத்துக்களை விற்று அந்த ‍பணத்தில் போட்டியிடுங்கள் . அதை விடுத்து மக்களிடம் வசூல் செய்து அவர்கள் பணத்தில் போட்டிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? அதனால் வெற்றியடைந்தால் உங்களுக்குத் தான் லாபம்,தோல்வியடைந்தாலும் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காரணம் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி இரவு பகலாக உழைத்து உங்கள் வெற்றிக்கு போராடக்கூடியவன் அப்பாவித் தொன்டன் தானே!

உங்கள் அரசியல் நிலையை மக்கள் என்ன அறியாமலா இருக்கிறார்கள்?நீங்கள் எப்படியெல்லாம் அரசியல் செய்வீர்கள் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்m,உங்களின் செயல்பாட்டினால் வெறுத்துப் போன, உங்களின் அறிவுரையால் அல்லாஹ்வின் ஆலயத்தை மூடுவதற்கு முழுமூச்சாய் பங்காற்றிய அதே ஊரைச்சார்ந்த உங்கள் இயக்கத்தின் முன்னாள் தங்கமுட்டையிடும் வாத்தாய் இருந்தவர், இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கிறாரா இல்லையா?

உங்கள் நிலையை என்ன மக்கள் உணராமலா இருக்கிறார்கள்? நாம் வாழும் தமிழ்நாட்டில் நமக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் அது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் நிச்சயமாக முடியும் என தெரிந்தும் நீங்கள் இங்கே கேட்டால் எங்கே கூட்டணிக்கு ஆபத்து வந்து விடுமோ எனக் கருதி உங்களின் போராட்டக் களத்தை டெல்லிக்கு மாற்றினீர்கள். தாம்பரத்திலே நடத்தப்பட்ட ஒரே ஒரு கண்துடைப்பு மாநாட்டைத் தவிர வேறு ஏதேனும் போரட்டம் நடத்தினீர்களா? இல்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் விலைபோகாத, வீரியமான, அரசுக்கு இம்சை தரக்கூடிய போராட்டங்கள் குறிப்பாக சிறை நிரப்பும் போராட்டம் காரணமாக வேறு வழியில்லாமல் ததஜ நிர்வாகிகளை அழைத்து இவர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கியது தமிழக அரசு. இதை நாங்கள் சொல்லவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு விசிறி வீசிக்கொண்டிருக்கிறாரே! அவர் சொன்னது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மனிதனுக்கு நன்றி செய்யாதவன் இறைவனுக்கு நன்றி செய்தவன் ஆக மாட்டான் என பேனரை வைத்து நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞருக்கு துதி பாடி பாராட்டு விழா நடத்தினீர்கள். அதுவும் நீங்கள் சீட்டுப் பொருக்குவதற்காக.

இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது என கருணாநிதியே ஒப்புகொண்டும்,அதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சரியானது என சப்பைக்கட்டு கட்டினீர்கள். வக்ப் வாரிய தலைவராக இருக்கும் போது ஆளும் கட்சியினர் மற்றும் சில தனியார்கள் செய்த‌ முறைகேடுகளை கண்டும் காணாமலும் விட்டு விட்டீர்கள். எவ்வளவு வக்பு நில ஆக்கிரமிப்பு, மதுரை வக்ப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த கொடுமை இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விட்டு கடைசியில் கருணாநிதி உங்களை வெளியேற்றியதும், சமுதாய மானம் காக்க உங்களின் வக்ப் தலைவர் பத‌வியை ராஜினாமா செய்தீர்கள், இடஒதுக்கீட்டில் குறைபாடு என்றீர்கள்,தனியாக போட்டியிட்டு ஆளும்கட்சியை மண்ணைக் கவ்வ வைப்பதாக கூறினீர்கள். கடைசியில் மண்ணைக் கவ்வியது யார் என்பது நாடே அறிந்த விசயம்.

இப்போது மறுபடியும் மானம் காக்க அம்மாவுடன் கூட்டணி. 3 சீட்டுக்களைப் பெற்றது ராஜதந்திரம் என சப்பைக்கட்டு கட்டும் தலைவர் அவர்களே! எங்களுக்கு பதவி முக்கியமில்லை, சமுதாய நலன் தான் முக்கியம் என நீங்கள் அன்றைக்கு பேசிய பேச்சுக்கும், அரசியலில் சட்டசபையில் பிரதி நிதித்துவம் பெறுவது தான் முக்கியம் என இன்றைக்கு பேசும் பேச்சுக்கு கொஞ்சம் கூட பொருந்திப் போகவில்லையே! சுய நினைவோடு அல்லது சுயசிந்தனையோடு தான் பேசுகிறீர்களா?

கடைசியாக ஒன்று. நீங்கள் உண்மையிலேயே சமுதாய மானம் காக்க புறப்பட்டது உண்மையானால் நீங்களும், ஜனாப் ஹைதர் அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து தமுமுகவில் இருக்கும் எத்தனையோ படித்த துடிப்பு மிக்க இளைஞர்கள் குறிப்பாக வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்களை வரும் தேர்தலில் நிறுத்தி அவர்களுக்கு வெளியே இருந்து வழிகாட்ட‌ உங்களுக்கு திராணியிருக்கிறதா?

பொதுவாக நாடாளுமன்ற‌ தேர்த‌லுக்கு த‌ங்க‌ளை வேட்பாளராக‌ த‌குதியாக்கிக் கொண்டவ‌ர்க‌ள் திரும்ப ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்த‌லில் போட்டியிட‌ வெட்கப்படுவார்கள் . அதேபோல க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ரும்,பொதுச்செய‌லாள‌ரும் ஏற்க‌னவே நாட‌ளும‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளாக‌ த‌குதிய‌டைந்து விட்டார்க‌ள், என‌வே அவ‌ர்க‌ள் இனிமேல் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்தலில் போட்டியிட‌ மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு பதவி ஆசை என்பது துளியும் கிடையாது என‌ க‌ழ‌க‌த்தின் உண்மைத் தொண்‌ட‌ர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதுமட்டுமின்றி கழகத்தில் தகுதியுடைய நிறைய பேர் வேட்பாளர்களாக காத்திருக்கிறார்கள். எனவே கழகத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் அவர்களுக்கு வழிவிட்டு இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆசை அல்ல, உங்களுடைய கழகக் கண்மணிகளின் ஆசை.

காரணம் உங்களுடைய வழிகாட்டுதல் தமுமுகவிற்கு தேவை என அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கனவே 3 சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகமாக மாற்றி விட்டீர்கள் என்ற கோபத்தில் இருக்கிறார்கள் உங்களுடைய தொண்டர்கள். அப்படிப்பட்ட உண்மைத் தொண்டர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தாமல் உங்கள் கழகத்தில் இருக்கும் நல்ல அறிவாளிகள் மற்றும் படிப்பாளிகளை முன்னிறுத்தி நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது நடக்குமா? இதை அமல்படுத்தி உங்களுக்கு பதவி ஆசை இல்லை என நிறுபிக்க முடியுமா? திருச்சியில் இருந்து பல்லவனாக வரும் ரயில் சென்னையிலிருந்து வைகையாக திரும்பிப் போவதைப் போல தவழ்ந்து வந்தால் தமுமுக, மானம் காக்க வந்தால் அது மமக‌ என மக்களை இரட்டைபணி செய்பவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள்.

வந்து போகும் ரயிலுக்குத் தெரியாது, அது என்ன பெயரில் செயல்படுகிறது என்று. ஆனால் தமுமுகவில் இருக்கும் எத்தனைத் தொண்டர்களுக்கு மமக மீது ‍பற்று இருக்கிறது. பொதுக்குழுவில் கூட அவர்களின் கருத்துக்கு வாய்ப்புத் தராமல் நீங்கள் எழுதிக்கொண்டு வந்த தீர்மானங்களை வாசித்து விட்டு போய் விடுகிறீர்கள். உங்களின் பதவிக்காலம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஒரு வருட காலம் நீட்டிப்பதற்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கைதூக்கினார்கள் என்பதை, தேவைப்பட்டால் பொதுக்குழு வீடியோவை ஒருமுறை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளுதல் நலம். இனியாவது உங்களின் தொண்டர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். பாவம் உங்களை நம்பி நிற்கும் அப்பாவித் தொண்டர்கள்.

Monday, February 28, 2011

சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர்



கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 32 பற்களும் தெரிய சிரிக்கிறார் சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர். கேவலம்3 சீட்டு கொடுத்ததற்கே இந்த சிரிப்பு என்றால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசிவாங்கியதைப் போல ஆசி வாங்கியிருப்பார் போலத் தெரிகிறது. முதலில் 15தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு அதிலே 12 சீட்டு கேட்டார்களாம். பிறகு 12ல் இருந்து குறைத்து 7 க்கு வந்தார்களாம். அப்பறம் இன்னும் கொஞ்சம் குறைத்து 5க்கு வந்தார்களாம். அப்புறம் விடாப்புடியாக 5 தொகுதிதான் வேண்டும் என சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போல தரையில் உருண்டு புரண்டு அடம்பிடித்தார்களாம். ஆனால் இவர்களின் அழுகுரல்களைக் கேட்டு கொஞ்சம் கூட மனமிறங்காத கருணைத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தா 3 தான் தருவேன் என ரொம்ப கறாராய் சொல்லி விட்டாராம்.
யார்கிட்ட உட்றீங்கானும் ரீலு? ஏற்கனவே 2 சீட்டு வாங்குறது தான் சமுதாய மானம் என சொல்லி கலைஞரிடம் உங்கள் மாப்பிள்ளை மிடுக்கை காட்டினீர்கள். அவரும் உங்கள் பலத்தை நினைத்து பயந்து பயந்து ஒரு சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒரு சீட்டில் யார் போட்டிடுவது என கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்,நிரந்தர பொதுச்செயலாளருக்கும் குடுமிபிடி சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக 2 சீட்டாவது தாங்க என மறுபடியும் போய் கதவைத் தட்ட அவர்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச்சாத்தி விட்டார்கள். அதற்குபிறகு தான் உங்களின் தனிபலத்தை நிறுபித்தீர்கள். அதாவது உங்கள் இயக்கத்திற்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் நீங்கள் வாங்கிய வாக்கு வங்கியின் மூலம் அம்பலமாக உங்கள் நிலை கண்டு சிரிக்காதவர்கள் யாருமில்லை.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்து கொண்டு இப்போது கொடுத்த 3 சீட்டை இப்படி கேவலமாக பல்லிளித்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுக்கிறீர்கள். இதுல வேற அண்ணன் பன்னீர் செல்வம் கையப் புடிச்சிக்கிட்டு கெஞ்சினாராம். அம்மாவைப்பத்தி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் உங்களின் கும்மாஞ்சி வேலைகள் பலிக்கும். கருணாநிதி வேண்டுமானால் இழுவை போட்டுப் பார்ப்பார். ஆனால் ஜெயாவைப் பொருத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ஒரே போடாக போடக்கூடியவர் எனபது எல்லாருக்கும் தெரியும். வேனுமினா 3 சீட்ட வாங்கிக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நடையைக்கட்டுங்கள் என அம்மா சொல்லியிருப்பார். உடனே கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் போட்டியிட 2 சீட்டு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் சிரிப்பே ஆயிரம் கதை சொல்கிறது தலைவரே!

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன் என்று தமுமுகவின் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு சால்ஜாப்பு சமாளிப்பு பதில்கள் அவர்கள் தளத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையாக இந்த கேள்விகளுக்கு அவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனையான பதில்கள் இதோ.

கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?

ஏன்! ஏற்கனவே சமுதாய மானம் காக்கப்போறோமுனு சொல்லிக்கிட்டு குப்புற விழுந்து மீசையில் மண்ணு ஒட்டுனது போதாதா! மறுபடியும் இந்த அம்மாகிட்டையும் வம்ப இழுத்துட்டு வரிஞ்சிகட்ட்டிக்கிட்டு நின்னா என்ன ஆகும்னு நல்லா தெரியும். அதனால தான் வந்த வரைகும் லாபம்னு 3 வாங்கிக்கிட்டோம். நல்லவேளை இதுவாவது கெடச்ச்தே.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது,விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?

ஆமாம்! கூடுதல் தொகுதி வேண்டி அதிமுகவை கண்டித்து தாம்பரத்தில் சாலைமறியல் போராட்டம், மெரினாவிலே சிறை நிரப்பும் போராட்டம், சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்,அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள‌ அதிமுக தலைமை அலுவலக வாசலில் உக்கார்ந்து கொண்டு யாரும் உள்ளே செல்லக்கூடாது என பாதைமறியல் போராட்டம். விமர்சிப்பவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதேபோல மக்களைப் பற்றியும் கவலையில்லை. எங்கள் கவலையெல்லாம் இந்தமுறையாவது கொஞ்சம் அதிகமா ஓட்டு வாங்கமுடியுமான்னு தான்.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

முதலில் எங்களைக் காத்துக் கொள்கிறோம். அப்பறம் பாக்கலாம் சமுதாயம் குறித்து

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

ஆமா..ஆமா..கின்னஸ் சாதனை இல்லையா? சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களா? ஆனால் அவர்கள் எங்களுக்குஓட்டுபோடுவார்களா?

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

அப்படியா! பரவாயில்லையே! எங்களுக்கே தெரியாத விசயமெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பேஷ்..பேஷ்..!

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை ஒப்பிடும் போது எங்களுக்கு 3 என்பது அதிகம் தான்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...

நாங்க எப்பய்யா வேனாமுனு சொன்னோம்! இன்னொரு நாள் போயி பேசலாமுனு நெனைக்கும் போது தான் கலைஞர் கதவ சாத்திட்டாரே! அப்படியிருந்தும் தலைவர் துபாயில், பொதுச்செயலாளர் சவூதியிலும் இருப்பதால் அவர்கள் வந்து பேசுவார்கள் என அறிக்கையெல்லாம் விட்டுப்பார்த்தோம். ஆனால் எதற்குமே மசியவில்லை கலைஞர்

கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

அதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டால் காலத்தை ஓட்ட முடியுமா?அரசியல்னு வந்துட்டா இது போன்ற அம்புகளையெல்லாம் தாங்கித்தானே ஆகனும்.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...,

முகவை அப்பாஸின் விளக்கம் சரியா

முகவை அப்பாஸின் விளக்கம் சரியா
முகவை அப்பாஸின் விளக்கம் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி குழுமங்கள் வழியாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த விளக்கத்தைப் பார்க்கும் போது முகவை அப்பாஸுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அநீதி இழைத்து விட்டது என்று தான் மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே அவரது விளக்கம் குறித்து பீஜே அவர்களிடம் கேட்ட விளக்கத்தை இங்கே நான் பதிவு செய்கிறேன்.
முகவை அப்பாஸின் விளக்கம் இது தான்.
சகோதரர் முகவை அப்பாஸின் உண்மை விளக்கம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...அன்பு சகோதருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 2005 .ஜூலை மாத இறுதியில், மாதம் நான்காயிரம் சம்பளம் மற்றும் மாதம் ஐந்துநாள் விடுமுறை அந்த ஐந்து நாட்களில் நான் ஊர் சென்று வருவது[எனது குடும்பம் எனது ஊரில் இருந்தபடியால்] என்ற ஒப்பந்தத்தின் பேரில் நாம் தலைமையில் பணிக்கு சேர்ந்தோம். அங்கு எமக்கு பல்வேறு பணிகள் தரப்பட்டன அதில் ஒன்று தொலைபேசி தொடர்பு. அதாவது தலைமையின் தகவல்களை நிர்வாகிகள் கட்டளைப்படி மற்றவர்களுக்கு சொல்வது; வரும் அழைப்புகளை வரவேற்று யார் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்பதை உரிய நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்து வைப்பது. இதற்காக ஒரு லேண்ட் லைன் போனும்-ஒரு மொபைல் போனும் எனது மேற்பார்வையில் தரப்பட்டது. இது போக எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு பழைய போனும் என்னிடம் உண்டு.
பின்னாளில் அது பழுதாகவே, பீஜேயின் மகன் முஹம்மது எனபவரின் கடையில் எனது சொந்த உபயோகத்திற்காக புதிய போன் ஒன்று வாங்கினேன். அதைப்பார்த்த பீஜே, என்ன அப்பாஸ் போன்லாம் புதுசா இருக்கு என்றார். அப்போது ஆமாண்ணே! நம்ம முஹம்மது கடையில்தான் வாங்கினேன் என்றேன். இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு போன் என்னிடம் இருந்தது என்று நீங்கள் புரிந்து கொள்ளவே!
சரி விஷயத்திற்கு வருவோம்; அலுவலகத்திற்கு வரும் போனில் தொடர்பு கொள்பவர்களில் பெண்களும் உண்டு. அவர்கள் அவசியமான விஷயங்களை மட்டும் என்னிடம் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் தகவலை அடிப்படையாக கொண்டு நிர்வாகிகளிடம் தகவல் சொல்லி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இன்னொரு வகையான கால்கள் எனது பொறுப்பில் உள்ள அலுவலக மொபைலுக்கு வரும். அது பீஜே மற்றும் பாக்கர் இருவரும் தேவைப்படும்போது எனது பொறுப்பில் உள்ள அலுவலக் மொபைலுக்கு 'டைவேர்ட்' செய்யும் கால்கள். அது தான் எனது வாழ்க்கையையும் 'டைவேர்ட்' செய்தவை. ஆம் இந்த இரு 'பரிசுத்தவான்களுக்கு' பெரும்பாலும் பெண்களின் அழைப்பே வரும். அதுவும் குலைந்து பேசும் டைப் பெண்கள்' அதில் பீஜேயை பற்றி இங்கே குறிப்பிட இது சமயமில்லை. அவர் என்னை தொடர்ந்து சீண்டினால் பின்னர் அம்பலப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.
இதில் பாக்கருக்கு வந்த போனில் ஒரு பெண் பேசுகிறார். அவர் ஆரம்பமாகவே என்னை பாக்கர் என நினைத்துக்கொண்டு, 'என்னங்க போன் பண்றேன்நு சொன்னீங்க! எவ்ள நேரமா நான் காத்துக்கிட்டு இருக்கிறது? என்று சற்று கொஞ்சலாக கேட்டார். அப்போது நான் முகவை அப்பாஸ் என்று என்னை அறிமுகப்படுத்திய பின், நீங்கள் யார் பேசுகிறீர்கள்? உங்கள் விசயமாக பாக்கரிடம் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் இல்லை நான் அவர்ட்டயே பேசிக்கிறேன் என்று கட பண்ணிவிட்டது. பின்பு ஒருநாள் இதுபோல் பாக்கர் நிர்வாக மீட்டிங்கில் இருந்தபோது என்னிடத்தில் போனை தந்து கால் வந்துச்சுனா யார்னு கேட்டு பிறகு என்னிடத்தில் சொல் என்றார். சற்று நேரத்தில் அந்த பெண் லைனில் வந்தது நான் பாக்கர் நிர்வாக மீட்டிங்கில் இருப்பதாகவும் என்ன சொல்லவேண்டும் என்றபோது, தனது பெயரை மட்டும் சொல்லி பாக்கரிடம் சொல்லுங்க அவருக்கு தெரியும் என்றது.
இவ்வாறாக அந்த பெண் பாக்கரை தொடர்பு கொள்ளும் பல சமயங்களில் சில சமயங்கள் நான் எடுக்கும் நிலை வரும்போது அந்த பெண் என்னோடு சகஜமாக தன்னை பற்றி கூறும் அளவுக்கு வந்துவிட்டார். அதாவது தான் ஒரு விதவை [கணவர் தற்கொலை செய்து கொண்டாராம்] என்றும் தனது இரு சகோதரிகள் மற்றும் தாய் ஆகியோரும் விதவை என்றும், தான் பாக்கரை தீவிரமாக காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் அதற்கு அப்பாசாகிய நீங்களும் ஹெல்ப் செயயவேண்டும் என்றார்கள். அப்போது நான் பாக்கரை நீங்கள் விரும்பலாம் ஆனால் பாக்கர் உங்களை விரும்புகிறாரா? என்று கேட்டேன். அதற்கு அந்த பெண், ஆம்! நான் அவருக்கு போனில் முத்தம் தந்துள்ளேன். அவர் என்னிடம் 'ஐஸ் குச்சி வேணுமா..? என்று கேட்கும் அளவுக்கு நாங்கள் நெருக்கம் என்றார் அந்த பெண்.
அப்போது நான் இல்லை நான் நம்ப மாட்டேன் பாக்கர் அப்படிப்பட்டவர் அல்ல என்றேன். உடனே அந்த பெண் பாக்கர் தனக்கு அனுப்பிய ஒரு மேஜெசை எனக்கு பார்வேர்ட் செய்தது. அதில் பாக்கர் என்னில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு ரோஜா பூவும், ரோஸ் பார் யூ என்ற வாசகமும் இருந்தது. பின்னாளில் அலுவலகம் எனக்கு தந்த மொபைலுக்கே அந்த பெண் போன் செய்து பேச ஆரம்பித்து விட்டது. நான் பாக்கருக்கு போன் பண்ணுனேன் அந்த லூசு எடுக்க மாட்டக்குது என்று சொன்னார்கள் நான் தெரியாது என்றேன்.
பிறகு காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு நான் பாக்கருடன் சென்றுகொண்டிருக்கும் போது எனக்கு அந்த பெண் போன் செய்து பாக்கர் எங்கே என்றது? நான் பாக்கருடன் காஞ்சிபுரம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்றேன். அதற்கு பாகர் என்னை விரும்புகிறார்ன்னு சொன்ன நம்ப மாட்டீங்கன்னு சொல்ரீங்கள்ள இப்ப பாருங்க நான் பாகக்ருடன் பேசுறேன் பாருங்க என்று சொல்லிவிட்டு அடுத்த் நொடியே பாக்க்கரின் லைனில் வந்தது. பாக்கர் அப்பெண்ணுடன் ஒருமையில் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு புரிந்துவிட்டது.
எனவே பின்னொருநாள் அந்த பெண் எனக்கு போன் செய்து தனது போட்டோ மட்டும் பயோடேட்டாவை அனுப்பியிருப்பதாகவும் அதை பாக்கரிடம் சேர்த்து விடுமாறும் சொன்னது. [தலைமையின் தபால் போக்குவரத்தும் எனது பணியே] அந்த தபால் வந்தவுடன் அதை பாக்கரிடம் கொடுத்தவுடன் அவர் எங்கள் முன்பாகவே அதை பிரித்து பார்த்தார் அப்போது நான் என்னன்னே! ரெண்டாவதா முடிச்சுர வேண்டியதுதானே என்றேன். அப்போது அவர், என் மனைவியின் இடத்தில் வேறு யாரையும் கொண்டு வரமாட்டேன் என்றார். அப்போது தான் எனக்கு பிடிபட்டது ஆகா!
இவர் அந்த பெண்ணுடன் கடலை போடுவதற்காக பயன்படுத்துகிறார் என்று. மறுபுறம் பாக்கரை படு தீவிரமாக அந்த பெண் காதலித்து கொண்டும் பாக்குடன் வாழ்வதாகவே கற்பனை பண்ணிக்கொண்டும் இருக்கிறது. எனவே அடுத்த முறை எனது லைனுக்கு வந்தபோது, நான் பட்டுபடாமல் பாக்கரின் செய்தியை சொன்னேன் அதாவது பாக்கர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு வசதியும் மார்க்க அனுமதியும் இருந்தாலும் அவர்கள பெரும்பாலும் ரெண்டாவது திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் காரணம் சமுதாயத்தில் அவர்களது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதுவார்கள் என்று சொன்னேன் அப்போது புரிந்துகொண்ட அந்த பெண் அழுதுகொண்டே எனது முதல் கணவர்முடிவுதானா அப்படியாகி விட்டது என்றால் நான் ஆசைப்பட்டது எல்லாமே தோல்வியில் முடிந்தால் ஒரு பெண்ணால் எப்டி தாங்கி கொள்ளமுடியும் என்றது. எனக்கோ பரிதாபமாக இருந்தது ஆறுதல் சொல்லிவிட்டு லைனை துண்டித்தேன்.
அதுவரை அந்த பெண்ணின் மீது எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இருந்ததில்லை. அந்த பெண்ணின் பரிதாப நிலை அவர்கள் குடும்பத்தில் அனைவரும் விதவை எனற நிலை எனவே நாம் ஏன் அந்த பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எனது உள்ளத்தில் அப்போது உதித்தது. அதை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தியபோது ஆரம்பத்தில் கடுமையாக மறுத்தாலும் பாக்கர் திருமணம் செய்யமாட்டார் என்பது உறுதியான நிலையில் நம் ஏன் அவரை நினைத்து கொண்டிருக்கவேண்டும் என்ற மனநிலைக்கு அந்த பெண் வந்து ஒரு நாள் எனக்கு போன் செய்து அப்பாஸ் நான் உங்களை விரும்புகிறேன் என்றது. பிறகு எங்கள் இருவருள்ளும் போன் தொடர்பு ஏற்பட்டது எனது சொந்த போனில் இருவரும் பேசிக்கொள்வோம். இதற்காக இரு நம்பர்களுக்கு மத்தியில் ஒரு நிமிடத்திற்கு பத்து பைசா எனும் திட்டம் உள்ள சிம் வாங்கி அந்த பெண்ணுக்கு அனுப்பினேன். எங்கள் இருவரது நம்பரும் அடுத்தடுத்த நம்பர்கள்.நாங்கள் இருவரும் எனது சொந்த போனில் மட்டுமே பேசிக்கொள்வோம். இதற்கிடையில் அந்த பெண்ணின் தாயாரிடம் போனில் பேசி எங்கள் திருமணத்திற்கு சம்மதமும் பெற்றுவிட்டேன்.
அந்த நேரத்தில்தான் ஷைத்தான் தான் கைவரிசையை காட்டினான்.கல்யாணம் உறுதி என்றதும் நாங்கள் நெருக்கமாக பேசிக்கொள்ள தொடங்கினோம். அப்படித்தான் ஒருநாள் இரவில் அந்த பெண் மிஸ்கால் தர நான் எனது சொந்த மொபையிலில் இருந்து பேசினேன் காசு தீர்ந்துவிட்டது. எனவே அலுவலக லேண்ட் லைனில் பேசினேன் இது போன்று சில நாட்கள் தொடர்ந்தது. அப்போது எத்தனை நிமிடம் அலுவலக போனில் பேசினோம் என்பதை கணக்கிட்டு, அலுவலக கணக்காளராக இருந்த மதுரை பெரியவரிடம் நான் காசு கொடுத்துவிடுவேன்.அவ்வாறு கடைசியாக சில நாட்கள் பேசப்பட்ட தொகை சுமார் முன்னூறு ரூபாய்கள் அளவுக்கு தரவேண்டிய தொகை தருவதற்கு உள்ளாகவே நான் எனது ஊருக்கு சென்றுவிட்டேன்.
நான் ஊருக்கு சென்ற பின்னால் பில் வந்தபோது அதுதான் சர்ச்சையாகி இப்போது பல நாள்,பலமணி நேரம் என்று பீஜே கதை விட காரணமாகிவிட்டது. இதற்கிடையில் அந்த பெண்ணிடம் நான் ஒரு நிபந்தனை விதித்தேன். அதாவது நீங்கள் பாக்கர் உள்ளிட்ட ய்யாரிடமும் போனில் பேசக்கூடாது என்று. சரி! என்று அப்பெண்ணும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டது. ஆனால் பாக்கர் அவர் தம்பி நானா உள்ளிட்ட சிலருடன் பேசியதை நான் அறிந்துகொண்டேன், எனவே இதையொட்டி எனக்கும் அப்பெண்ணுக்கும் மனக்கசப்பு தோன்றி மறையும்.
இதற்கிடையில் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கென ஒவ்வொரு சிம் வழங்கப்பட்டு இருந்தது அதற்கு அடிப்படை வாடகை மட்டும் அலுவலகம் கட்டும்[பீஜேவுக்கு விதிவிலக்கு] கூடுதலாக வரும் கட்டணத்தை சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் கட்டவேண்டும் என்ற நிபந்தனை. பின்னாளில் அலுவலகம் எந்த கட்டணமும் கட்டாது மொத்த பில்லையும்சம்மந்தப்பட்டவர்தான் கட்டவேண்டும் என்று அறிவிக்கப்பட்டவுடன் பெரும்பாலான நிர்வாகிகள் சிம்மை அலுவலகத்தில் ஒப்படைத்து 'கேன்சல்' செய்யுமாறு கூறிவிட்டனர். அவ்வாறு பாக்கரும் தனது சிம்மை என்னிடம் தந்துவிட்டு துபாய் சென்றுவிட்டார். நான் அந்த சிம்மை எனது போனில் போட்டு இந்த பெண் பாக்கரை தொடர்பு கொண்டுள்ளதா என்று பார்த்தேன். அப்போது அந்த பெண் பாக்கருக்கு அனுப்பிய கண்ணோடும் நெஞ்சோடும் என்று காதல் ரசம் பொழியும் கவிதையை பார்த்தேன் உடனே அப்பெண்ணுக்கு போன் செய்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக பேசமாட்டேன் என்றாய் ஆனால் இப்படி கவிதை அனுப்பியுல்லாயே என்றேன் அதையொட்டி எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்தது.
அதற்காக் அந்த பெண் ஒழுக்கம் சரியில்லாதவர் என்று கூறமாட்டேன். ஆனால் பாக்கரை அந்த பெண்ணால் மறக்க முடியவில்லை என்பதும், நானா உள்ளிட்ட பலரிடம் வெட்டியாக பேசுவதும் அந்த பெண்ணின் பலவீனம். அது எனக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில் ஊருக்கு சென்ற நான் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கபப்ட பணிக்கு திரும்ப பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் டெலிபோன் பில் பீஜேயின் பார்வைக்கு போய் அவர் பாக்கரிடம் சொல்லி பாகருக்கு அது அறிமுகமான நம்பர் என்பதனால் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கேட்க, என் மேல் தப்பில்லை. அப்பாஸ் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று டார்ச்சர் பண்ணினார் என்று பல்டியத்த்துவிட்டது.
நான் ஊரில் இருந்து வந்தவுடன் பாக்கர் என்னை தக்வா ஹஜ் சர்வீசுக்கு அழைத்தார். அங்கு ஒரு அறையில் கோவை ஜாபருடன் இருந்தார்.வேறு யாரும் அங்கு இல்லை. பின்பு பாக்கர் என்னிடம், என்ன அப்பாஸ் நீங்க எவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கீங்க! ஒங்களுக்கு குடும்பமும் இருக்குது நீங்க இப்படி செய்யலாமா? என்று இந்த போன் விஷயத்தை சொன்னார். அதோடு அந்த பொண்ணு நல்லவ இல்ல அப்பாஸ் மொதல்ல என்னிட்ட கடலை போட்டா!. ! இப்ப என் தம்பி [நானா] அவளை தொரத்திக்கிட்டு திரியிறான் என்றார்.
அப்போது நான், அண்ணே நான் அந்த பெண்ணிடம் போனில் பேசியது உண்மை கல்யாணம் பண்ணிக்கிரணும் என்றுதான் பேசினேன். ஆனாலும் நான் வகித்த பதவிக்கு உரிய தகுதியை இழந்துவிட்டேன். எனவே நான் விலகிக்கொள்கிறேன் என்றேன். உடனே பாக்கர் அப்பாஸ் நீங்க எங்க போகப்போறிங்க பேசாம இருங்க தப்பு பன்றது மனித இயல்புதான், இந்த விசாரணையை நீங்க திருந்திக்கிற ஒரு வாய்ப்பா எடுத்துக்கங்க! எனவே நீங்க வழக்கம்போல் பணியை செய்யுங்க. நீங்க ஆபிஸ் போன்ல பேசுன தொகையை அலுவலகத்துல கட்டிடுங்க! ஆனா கொஞ்ச நாளைக்கு போன் மட்டும் நீங்க அட்டன் பன்னவேனாம் என்றார். மற்ற பணிகள் அனைத்தையும் செய்யுங்க என்றார்.
எனவே மீண்டும் நாம் சுமார் இரு மாதங்கள் வரை பணியில் இருந்தோம். பணியில் இருக்கும் போதே வெளிநாடு போவதற்காக ஒரு தவ்ஹீத் சகோதரரிடம் பாஸ்போர்ட்டை தந்து இருந்தோம். இதற்கிடையில் ஹஜ் பெருநாள் வருகிறது. அதற்கு நான் ஊருக்கு போகவேண்டும் என்று அலுவலக பொறுப்பாளர் தவ்பீக் இடம் நான் லீவ் லெட்டர் தருகிறேன் அப்போது அவர் ஆள் இல்லையே, சுபைர் போறார் இக்பால் லீவு வேனும்கிறார், மதுரை பெரியவர் போறார் எனவே ஆள் இல்லை என்கிறார் நான் வலியுறுத்தி கேட்டபின் ஐந்து நாட்கள் லீவு தருகிறார். நான் ஹஜ் பெருநாளைக்கு ஊருக்கு போகிறேன். ஊரில் இருக்கும் நிலையில் எனது வெளிநாடு பயணத்திற்காக திருச்சி போகுமாறு ஏஜென்ட் சொல்கிறார் நான் திருச்சி போய் விட்டு வந்த பின் இன்னும் ஒரு மாதத்திற்கு உள்ளாக பயணம் என்கிறார் ஏஜென்ட். அப்போது நான் தவ்பீக்குக்கு போன் செய்து நான் ஒரு மாதத்தில் பயணம் செல்ல வேண்டியிருக்கும் எனவே நான் தலைமைக்கு வந்தாலும் ஒரு மாதம்தான் வேலை பார்க்கமுடியும் எனவெ நான் வரவேண்டும் என்று நீங்கள் சொன்னால் வருகிறேன் என்றேன் .
அதற்கு அவர், இருங்க பாக்கரிடம் கேட்டு சொல்றேன் என்று சொன்னவர் அடுத்த ஐந்து நிமிடத்தி;ல் எனக்கு போன் செய்தார். நான் பாக்கர் இடம் கேட்டேன் அவர் ஒரு மாதம் வந்து என்ன செய்ய அதுனால வெளிநாடு போறவன் குடும்பத்தோட இருக்கட்டும்னு சொல்லிட்டாரு என்று தவ்பீக் சொல்லிவிட்டு நீங்கள் முறைப்படி ஒரு ராஜினமா கடிதம் அநிப்பி வைச்சிருங்க என்று சொல்றார். நான் ஒரு ராஜினாமா கடிதம் அனுப்பிவைத்தேன். பின்பு வெளிநாடு விஷயமாக நான் சென்னை வந்தபோது சென்னையில் அலுவலகத்தில் ஒருமுறை பாக்கரை சந்தித்தபோது அண்ணன் மறுபடியும் ஒங்களை ரீகால் அதாவது திரும்ப கூப்புட சொல்றாக என்றார்! அப்ப நான் அண்ணே! velinaattu பயணத்தில் இறுதி கட்டத்தில் நான் இருக்கிறேன் என்றேன். சரி பரவாயில்லை என்றார்.
பின்பு நான் பயணத்தின்போது அலுவலகத்தில் பீஜே முனிர் சித்தீக் பாக்கர் உள்ளிட்ட சில நிர்வாகிகளை சந்தித்து பயணம் சொல்கிறேன் அப்போது பீஜே, அருகில் இருந்த சுபைர் என்பவரிடம் அப்பாசை நம்ம ஆபீஸ் வண்டியில் ஏர்போர்ட்டுல விட்டுட்டு வர ஏற்பாடு செய்யுங்க என்கிறார். அதோடு என்னிடம் நீங்க குவைத் ததஜ வுக்கு தலைவர் ஆகி விடுங்க என்கிறார்.பின்பு அலுவலக காரில் நான் விமான நிலையம் வந்து குவைத் வந்தேன்.
இதன் மூலம் நான் சொல்ல வருவதும் கேட்க விரும்புவதும்;
• நான் அலுவலக போனில் பேசியதை மறுக்கவில்லை. அதற்கு நான் பணம் கட்டியுள்ளேன் . அதை மறைத்து நான் ஆபீஸ் போன் கட்டணம் உயர காரணமாக இருந்தேன் என்று பீஜே சொல்வது சரியா?
• நான் அந்த பெண்ணை திருமணம் செய்யும் நோக்கில்தான் பேசிக்கொண்டோம். ஆனாலும் ஏனோ அது நிறைவேறவில்லை. இருப்பினும் திருமணம் ஆகும்வரை அந்த பெண் எனக்கு அந்நிய பெண்தான் என்பதை நான் மறந்தது தப்புதான்.
• மேற்கண்ட விசாரணைக்கு பிறக்கும் நான் ஆபீஸில் பணியாற்றி பின்பு வெளிநாடு பயணத்திற்காக ராஜினாமா செய்திருக்க, எண்ணி இழிவு படுத்த வேண்டாம் நானாக விலகிக்கொள்கிறேன் என்று நான் கூறியதாகவும் அதனால் கண்ணியமாக விடுவித்தோம் என்று பீஜே கூறுவது அப்பட்டமான பொய்யல்லவா?
• பீஜேயின் கூற்றுப்படி குற்றவாளியான எனக்கு எதற்கு அலுவலக கார் ஏற்பாடு செய்தார்?
• பீஜேயின் கூற்றுப்படி 'பாக்கரிசம்' உடைய என்னை எதற்காக குவைத் ததஜ தலைவர் ஆக சொன்னார்..?
• குவைத் நிர்வாகிகளிடம் பலமுறை என்னை பற்றி விசாரித்ததோடு, அப்பாஸ் ஜமாத்துக்காக பாடுபட்ட ஆள். அவரை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஏன் பீஜே சொன்னார்?
• அந்த விசாரணையின் போது நானே விலகிக்கொள்கிறேன் என்று சொன்ன போது இல்லை நீங்கள் மீண்டும் பணி செய்யுங்கள் என்று சொன்ன பாக்கர் இன்று நான் நீக்கப்பட்டதாக கூறுவது பொய்யல்லவா?
• நான் அந்த பெண்ணுடன் திருமணம் செய்யும் நோக்கில் பேசியிருந்தாலும் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட காரணம் பாக்கரின் லீலையல்லவா?, இப்போது அவர் பரிசுத்தவான் போலவும் இறக்கப்பட்டு வாழ்க்கை கொடுக்க நினைத்த நான் குற்றவாளி போலவும் பாக்கர் சொல்வது தவறல்லவா?
• குறிப்பு; இதில் சொல்லப்பட்டவைகள் கால சூழ்நிலை மாறி இருக்கலாம். ஆனால் சொன்ன செய்தி அனைத்தும் உண்மை .
இதில் சொல்லாத பல உண்மைகளும் உண்டு,
மேற்கண்ட செய்திக்கு பீஜேயின் விளக்கம்
முகவை அப்பாஸ் சொல்லக்கூடிய செய்தி உண்மை என்றால் அவரை விட பாக்கர் தான் அதிக நடவடிக்கைக்கு உரியவராகிறார்.
சுனாமி நிதி சம்மந்தமாக பாக்கர் மீது குற்றச்சாட்டு வந்த பின் நிதியாதாரங்களை நான் தான் கையாண்டு வந்தேன். அதே நேரத்தில் அலுவலக ஊழியர்கள் தொடர்பான பொறுப்பு அப்போது பாக்கரிடம் இருந்தது.
லேண்ட் லைன் தொலைபேசி பில் என் பார்வைக்கு வந்த போது குறிப்பிட்ட் ஒரு எண்ணுக்கு நள்ளிரவு நேரத்தில் பல தடவை போன் போடப்பட்டது அந்த பில்லில் இருந்து தெரிந்தது.
எனவே இது குறித்து அலுவலக ஊழியர் விஷயத்தில் பொறுப்பாளராக இருந்த பாக்கரிடம் நான் இது குறித்து தெரிவித்தேன். நள்ளிரவில் பேசப்பட்டுள்ளதால் அது நிச்சயம் ஜமாஅத் பணியாக இருக்காது. அதுவும் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் ஜமாஅதின் நிதியாதாரம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் விசாரிக்க வேண்டும். நீங்கள் விசாரிக்கிறீர்களா? நான் விசாரிக்கட்டுமா என்று நான் பாக்கரிடம் கேட்டேன். அவர் பில்லை வாங்கிப் பார்த்து விட்டு அதை என்னிடம் விட்டு விடுங்கள். நான் விச்சரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று பாக்கர் கூறினார். அதன் பிறகு நான் அதை விட்டு விட்டேன்.
அவனை அப்பாஸை கடுமையாக எச்சரித்து விட்டேன். அவன் பணியில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்து விட்டேன். அவன் யாரிடம் பேசினான் என்பதைக் கண்டு பிடித்து விட்டேன். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் பேசுவதற்கு ஆபீஸ் போனை அவன் பயன்படுத்தியுள்ளான். அவன் ராஜினாமா செய்து விட்டு போய் விடுவான். அதற்கு சின்ன அவகாசம் கேட்டுள்ளான். இனி போனை அட்டன் பண்ணக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவனுக்கு சிறிது அவகாசம் கொடுத்துள்ளேன் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாக்கர் என்னிடம் தெரிவித்தார்.
ஆனால் அப்பாஸ் இப்போது கூறிய செய்திகளை என்னிடம் அப்போதே கூறியிருக்க வேண்டும். அதுவும் அவரது சொந்த அலுவலகத்துக்கு வரச் செய்து பாக்கர் விசாரித்ததும் அவருடைய பாலியல் தொடர்பும் என் கவனத்துக்கு அப்பாஸ் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்பாஸின் இந்த விளக்கத்தை நான் பார்க்கும் வரை இந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாஸின் விளக்கத்தைப் பார்த்த பின் கலீல் ரசூலிடம் இப்படி ஒரு மெயில் வந்துள்ளது என்று பேசிக் கொண்டிருந்த இந்த விஷயம் ஆபீஸில் பணியாற்றிய ஜுபைர் மூலம் எனக்கு முன்னரே தெரியும் என்றார்.
எனவே இந்த விஷயத்தை அப்பாஸ் அப்போதே என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும்,. அவர் தெரிவிக்காவிட்டால் பாக்கர் என்னிடம் தெரிவித்த செய்தி மட்டும் தான் எனக்குக் கிடைக்கும் என்பதைக் கூட அவர் ஏன் புரிந்து கொள்ளவில்லை.
இப்போது பாக்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போதே எடுக்கப்பட்டிருக்கும்.
பாக்கர் எனக்குச் சொன்ன தகவல் நடவடிக்கை எடுத்து அவனை நீக்கி விட்டேன். சிறிது அவகாசம் கொடுத்துள்ளேன் என்பது தான்.+
அப்பாஸ் தரப்பு செய்தி எனக்குத் தெரியாத போது அவர் என்னை அன்றாடம் சந்தித்து பேசும் வாய்ப்பில் இருந்தும் என்னிடம் சொல்லத் தவறியதால் மனிதன் என்ற முறையில் பாக்கர் சொல்வதைத் தான் நான் நம்ப முடியும்.
பொதுவாக ஜமாஅத்தில் இருந்து சில காரணங்களுக்காக சிலர் நீக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நீக்கப்பட்ட யார் மீதும் நான் வெறுப்புக்காட்டுவதில்லை. தவறுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்குக் கட்டுப்பட்டு ஜமாஅத்துக்கு எதிராக செயல்படாதவாரை நான் அவர்களுடன் கருணையோடு தான் நடந்து கொண்டிருக்கிறேன். நான் யாரையாவது பணியில் இருந்து நீக்கினால் அவரை அழைத்து ஜமாஅத் தலைவன் என்ற முறையில் இது என் மீது கடமை. ஆனால் இதனால் உங்கள் வருவாய் பாதிக்கப்படலாம். வேறு நிறுவனங்களில் உங்களைச் சேர்த்து விடட்டுமா? அல்லது வேறு வேலை கிடைக்கும் வரை உங்களுக்கு உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யட்டுமா எனக் கேட்டு அதற்கேற்ப செய்தும் கொடுத்த்யுள்ளேன்.
எனக்கு பாக்கர் சொன்ன தகவல் படி அப்பாஸ் நீக்கப்பட்டவர் என்பது தான். ஆனாலும் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்து அவரது தேவைகள் பற்றி விசாரித்தேன். சொந்த வெறுப்பினால் இந்த நடவடிக்கை என்று அவர் நினைத்து விடக் கூடாது இதன் காரணமாக கொள்கையை விட்டு போகக் கூடாது என்பதற்காக அவர் குறிப்பிட்டது போல் அவரை மரியாதையாக நடத்தியது உண்மை தான். அவர்கள் இயக்கத்துக்கு எதிராகப் போகாதவரை இப்படி நடப்பது தான் என் இயல்பு. அப்பாஸ் ஜமாஅத்தில் வாங்கியிருந்த கடன் தொகையை தந்து விடுவதாக அவர் கூறிய போதும் வேலை இல்லாமல் இருக்கும் நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று கூறி அதற்கும் மாற்று ஏற்பாடு செய்தேன். இது என் இயல்பு. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தான் நான் கருதினேன் என்பதற்கு இது முரண் இல்லை. இது தான் என் இயல்பு.
நான் பொறுப்பில் இருந்து விலகிய பின் ஒரு ஊழியர் புது நிர்வாகத்தால் திடீரென நீக்கப்பட்டது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நிர்வாகத்தில் நான் தலையிடக் கூடாது என்பதால் நீக்கப்பட்டவருக்கு தகுதியான ஒரு வேலையை ஏற்பாடு செய்து அவரை அழைத்து இதைத் தெரிவித்தேன். ஆனால் அவர் அதை விட அதிக சம்பளத்தில் வேறு வேலை கிடைத்து விட்டதாக கூறி விட்டார். என் இயல்பு இது தான் என்பதற்கு இதைக் கூறுகிறேன்.
இதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கும் என்று அப்பாஸ் கருதியிருக்கிறார் என்பதும், இவர்களே கேடு கெட்டவர்களாக இருந்து கொண்டு என்னை நீக்கி விட்டார்களே என்னை விசாரிக்கிறார்களே என்று அவர் கருதியதால் ஜமாஅத் மீது வெறுப்பில் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. எனக்கு இந்த விபரங்கள் தெரிந்து நான் பாக்கருக்கு உடந்தையாக இருந்தால் தான் அவரது பார்வை சரியானதாக இருக்கும்.
நீக்கப்பட்டவரை விட நீக்க்கியவர் மோசமானவர் எனும் போது இது அப்பாஸுக்கு இழைக்கப்பட்ட அநீதி தான். ஆனால் அந்த அநீதி அவராகத் தேடிக் கொண்டது தான். பாக்கரைக் காப்பாற்றுவதற்காக அவர் ஏன் பழியைச் சுமக்க வேண்டும்? பாக்கரையும் கேள்வி கேட்கும் பொறுப்பில் நான் இருக்கும் போது அதை ஏன் என்னிடம் முறையிடத் தவற வேண்டும்?
போகிற போக்கில் அப்பாஸ் என் மீதும் குற்றம் சுமத்தும் வகையில் சில சொற்களை பயன்படுத்தியுள்ளார். பாக்கர் போல் என்னையும் சித்தரிக்கும் வகையில் அந்த வார்த்தை உள்ளது. பாக்கரைப் போல் என் மீது எதுவும் ஆதாரம் இருந்தால் அவர் தாராளமாக வெளிப்படுத்தலாம் என்பது தான் இதற்கான பதிலாகும்.
இவ்வாறு பீஜே தெரிவித்தார்