Tuesday, April 12, 2011

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா, திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடுங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.

மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களையும் குழண்ட்தைகளையும் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி என ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

”மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மாலை மலர் செய்தி




தமிழ் முரசு



ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.பெண்கள் அங்குமிங்கும் ஓடியதில் சில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் கூட பார்க்காமல் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக குண்டகளின் செயலை, ஏவிவிட்ட நாய்களைப் போல அமைதிகாத்து தங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டியது மமக.

தவ்ஹீத் ஜமாஅத்தின் திமுக ஆதரவு நிலையால் பெரும்பாண்மை முஸ்லீம்களின் வாக்கு திமுகவுக்கு மாறி திமுக கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதால் வெறுப்படைந்த அதிமுகவினர் இவர்களின் பிரச்சாரத்தை கெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளனர்.

ஆனால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது மதப்பிரச்சனையாக மாறி விடும் என பயந்த அதிமுகவினர், அவர்களின் இன்றைய அடிமைகளான மம கட்சியை ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவழைத்து, முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அதிமுகவின் திட்டத்தை சொல்லினர்.

எஜமானனின் திட்டத்தில் இஸ்லாமியனின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற பாணியில் இதை ஏற்றுக்கொண்டு தங்களின் எஜமானிய விசுவாசத்தைக் காட்ட எத்தனித்த மம கட்சியினர் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறியில் இருந்த SDPI காரர்க்ளையும் இணைத்துக்கொள்ளலாம் என அவர்களின் யோசனையைச் சொல்ல இதை முழுமையாக ஒப்புக்கொண்ட அதிமுகவினர், அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.

அதாவது பொதுக்கூட்டம் நடந்த சாரமேடு மெயின் ரோடு பகுதியில் இருந்த 6 க்கும் மேற்பட்ட சந்துகளில் அதிமுகவின் குண்டர்கள் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஏற்கனவே கடும் போதையில் இருந்ததால் அவர்களுக்கு கொலைவெறி இன்னும் அதிகமாகவே இருந்தது.

அதிமுகவினர் சந்துகளில் குவிக்கப்பட அதன் அடுத்த சாலையில் SDPI யும் மமகவினரும் தங்கள் வாகனங்களில் தயாராய் இருந்தார்கள்.

கூட்டம் முடியும் நேரத்தில் உள்ளே புகுந்து அதிமுக குண்டர்கள் முதல் தாக்குதல் நடத்த துவங்க, பின்னர் செல்போன் லைட்டின் உதவியால் ஒவ்வொரு கிளை நிர்வாகியாக அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

அத்தோடு மேடையை நோக்கி குண்டர்கள் வீசிய கற்கள் மேடைக்கு முன்னாள் கூடியிருந்த பெண்களின் பகுதியில் வந்து விழுந்தன. ஆனால் நல்லவேளையாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் வல்ல இறைவன் காத்துவிட்டான். முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்களை விளக்கு பிடித்து ஆள்காட்டி முன்னின்று நடத்திய மமகவோ, SDPI யோ அங்கே பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர்கள் கூட்டங்களுக்கு இனி பெண்கள் வரக்கூடாது என்பதற்காகவே மாற்றார்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சமும் தடுக்காமல் தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது மமக.

காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடியாக யாருமே வராததாலும், நம் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற என்னத்தில் அமைதி காத்ததாலும் அதிமுக,மமக, SDPI யின் வன்முறை வெறியாட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.

இரவு 11 மணிக்கு மேல் தன் படையினருடன் வந்த கமிஷ்னர் சைலேந்திர பாபுவிடம் 25 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அதிலே 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நம் மக்கள் கலைந்து சென்றனர்.

கோவையில் அதிமுக தனியாக போட்டியிடுகிறது. அவர்களுக்கு மமக ஆதரவு அளிக்கிறது. அவர்களை எதிர்த்து எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. ஆனால் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் மறந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தாக்க வேண்டும் என்ற விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

அதிமுக பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்லி வந்த மமக இன்றைக்கு ஏகத்துவததை அழிக்க அதிமுகவோடும், எஸ்டிபியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர்.

நம் சமுதாய ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு விளக்கு பிடித்து வழிகாட்டிய இந்த மமகவினரா நம் சமுதாய நலனை காக்கப் போகிறார்கள். சிந்தியுங்கள் இஸ்லாமிய சமுகமே! இவர்களை முழுமையாக புறக்கணித்து இவர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

பா.ஜ.கவின் பினாமி தான் ஜெயலலிதா - தமுமுக தலைவர் டெஹல்காவுக்கு அளித்த பேட்டி

தமுமுக கிளைகள் கலைக்கப் படுகின்றன. 2








ஏகனின் திருப்பெயரால்...


எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லை. முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேட்பாரின்றி வேதனைப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் நாம் ஒன்றிணைய வேண்டும், அதற்கு என்னவழி என யோசித்த தமுமுகவின் முன்னாள் நிர்வாகிகள், குணங்குடி ஹனீஃபா வைத்திருந்த 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' எனும் பெயரை தூசி தட்டி எடுத்து அதை வீரியப்படுத்தி முஸ்லிம்களை ஒன்றிணைத்தனர். அதன் காரணமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையத் தொடங்கின.


அதன் அமைப்பு நிர்ணய சட்டம்(பைலா)வில் பிரிவு(எ) ஆகிய 'கழகம் அரசியல் கட்சி சார்பற்றதாகவே செயல்படும். எந்த காலத்திலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகராட்சி, ஊராட்சி ஆகிய தேர்தல்களில் போட்டியிடாது' என்ற விதியின் படி பணிகளை செய்து கொண்டிருந்தது.




அதனுடைய பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் பதவி ஆசைக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அமைப்பை நடத்தவில்லை, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் ஒருபோதும் தேர்தலில் நிற்கமாட்டோம்' என்று அனைத்து மேடைகளிலும் முழங்கினர்.




மக்களும் அதை நம்பி அணி திரண்டனர். நாளடைவில் அதன் தற்போதைய நிர்வாகிகளுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டபோது இந்த அமைப்பை கட்டிக்காத்த பீ.ஜே, பாக்கர் உட்பட பலரை வெளியேற்ற திட்டமிட்டு தவ்ஹீத் பிரச்சாரத்தால் கப்ரு வணங்கிகள், தரீக்காவாதிகள், ஓதி பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பூசாரிகள், மரம், மட்டையை வணங்கும் முஸ்லிம்கள்(?!) எல்லோரும் தமுமுகவில் இணைய மறுக்கின்றனர் என்று கூறி தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றிவிட்டு தமுமுக எனும் இயக்கத்தை தற்போதைய நிர்வாகிகள் அபகரித்தனர். இவ்வாறு தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட இயக்கத்தையும் இடத்தையும் அபகரித்துவிட்டு அதிலிருந்து தவ்ஹீத்வாதிகள் துரத்தப்பட்டனர். ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலை போலானது.
அந்த சூழ்நிலையில் கூட இவர்கள் அரசியல் ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


2005 ஜூன் மாதத்தில் மக்கள் உரிமையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.


உமர் அலி, மஞ்சக்கொல்லை


?தமுமுக, முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று தேர்தலை சந்தித்தால் என்ன?!


முஸ்லிம் லீகும் தேசிய லீகும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள். தமுமுக தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.அந்த இரு லீக்குகளும் குறைந்த பட்சம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்பட முன்வந்தால், அவர்கள் இருவரையும் தமுமுக வழிநடத்தி அதிகமான தொகுதிகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யும்.இதனால் நமது வாக்குகள் சிதறாத நிலை ஏற்படும். அதிகமான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களாக உருவாகும் சூழலும் ஏற்படும். இதை இரண்டு லீக்குகளும் பரந்த மனதோடு சிந்திக்க வேண்டும்.
மக்கள் உரிமை மே 27 – ஜூன் 02, 2005 பக்கம் 14


அது மட்டுமின்றி 2006 –ல் கோவையில் நடந்த செயற்குழுவில் தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்று தீர்மானமாகவும் கொண்டுவந்தார்கள்.
பார்க்க மக்கள் உரிமை செப்டம்பர் 22 – 28, 2006 பக்கம் 1,2,14



அமைப்பின் கட்டுக்கோப்பை மீறினால் எதிர்காலத்தில் தமுமுக நிர்வாகியாகும் வாய்ப்பை இழந்து விட நேரிடும் என அறிவிப்பு செய்கிறார் ஹைதர் அலி.

இது அவருக்கு பொருந்தாதோ?

அதற்கு அடுத்த மாதம் தமுமுகவின் விதியை மீறி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கடலாடி ஒன்றிய செயலாளர் பாஹிர் அலியை பொறுப்பில் இருந்து நீக்கி சிக்கல் நகர நிர்வாகத்தையும் கலைத்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், சோதுகுடி கிளை தலைவரான அஹமது ஜலால் மற்றும் கீழாயூர் கிளை நிர்வாகி கனி ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கியது.



இவ்வாறு செய்தவர்கள் திடீரென தங்களுடைய அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தனர். அன்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் தேர்தலில் ஒரு போதும் போட்டியிட மாட்டோம்' என்றவர்கள் அதற்காக திட்டமிட ஆரம்பித்தனர். பின்னர் திமுகவிற்கு ஆதரவளித்து திமுகவால் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்பட்ட போது கூட சமுதாயத்தின் முதுகில் குத்தி திமுகவிற்கு வெண்சாமரம் வீசி, அதனால் வக்பு வாரியம் கிடைக்கப்பெற்று அதில் சுகம் கண்ட இவர்கள் பதவிகளுக்காக பறக்க ஆரம்பித்தனர்.


முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தவருக்கும் எனில் ஏற்கனவே பல கட்சிகளும் பல அமைப்புகளும் இருக்கின்றன. அனைவருக்காகவும் ஒரு அமைப்பு எனில் ஒரு முஸ்லிம் கூட இந்த அமைப்பில் இணைந்திருக்கமாட்டான். முஸ்லிம்களை வைத்து உயர்ந்து விட்டு இன்று அந்த முஸ்லிம்களையே எட்டி உதைக்கின்றனர். முஸ்லிம்களை மட்டும் வைத்திருப்பதால் நாம் பதவிக்கு வரமுடியாது என நினைத்த இவர்கள் மற்றவர்களையும் இணைக்க துவங்கினர். எனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'மக்கள் முன்னேற்ற கழகம்' என பெயர் சூட்டினர். அதுவும் பெயர் மாறி 'மனித நேய மக்கள் கட்சி' என்று தற்போது உலா வருகிறது.


அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறியவர்கள் எதற்கும் துணிவார்கள். அரசியல் லாபத்திற்காக சமுதாயத்தை விற்றவர்கள் இன்று திமுக, அதிமுக, சரத்குமாரின் சமுக, பாஜக என தாவித்தாவி சென்றபோதும் அனைவராலும் துரத்தி அடிக்கப்பட்டு வேறு வழியின்றி தனித்து நிற்கும் நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரத்திற்கொரு வாக்கு, நாளுக்கொரு பேச்சு பேசும் இவர்களைவிட பிற அரசியல் கட்சிகள் மேல் என தமுமுகவின் நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை தலைவரான அன்வர் பாட்ஷா மற்றும் கரீம், உசேன், ஷபீ, சாவேஸ் உட்பட பலர் தமுமுகவிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து யூனுஸ்கானுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.


பார்க்க படம் :


இது தொடக்கம் மட்டுமே!

அரசியலும் இஸ்லாமிய இயக்கங்களும்






ஏகனின் திருப்பெயரால்...


ஜாக் : தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அடிக்கடி ஒற்றுமை பிரசுரம் வெளியிடுவார்கள். இவர்களைவிட்டு பிரிந்த அனைவரும் பாவிகள் என்று ஃபத்வா கொடுத்தார்கள். ஜாக் அமைப்பை சாராதவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நோட்டீஸ் அடித்தார்கள். (தேவைப்படுவோருக்கு ஆதாரம் தரப்படும்.) நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இந்த காலத்திற்கு பொருந்தாது என்று பொதுமேடையில் பகிரங்கமாகவே சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாகவும் சொல்வார்கள். ததஜவினர் சந்தணத்தை பூசிக்கொண்டால், அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சாக்கடையை தங்கள் மேல் பூசிக்கொள்வார்கள்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸை ஆதரித்து 15-04-200 6 15-04-2006 அன்று ஜாக்கின் மாநில செயலாளர் மற்றும் பிரச்சார பீரங்கியான கோவை அய்யூப் கடையநல்லுரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.




ஏப்ரல் மாதத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ததஜ அதிமுகவை ஆதரித்ததால் மே மாதம் அந்தர்பலடி அடிக்கிறார் கமாலுதீன்.


'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 20பக்கம் 20 என்று எழுதுகிறார்கள்.

பீ.ஜே யை திட்டுகிறோம் என நினைத்துக் கொண்டு சாக்கடை குளியல் நடத்தினார்கள்.

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48


நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி

சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51



இவ்வாறு எழுதியவர்கள் பித்னாவில் ஆஸ்கார் விருதுபெற்ற பஸிலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கோரி நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பார்க்க படம்


அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் ஜாக்கின் துணை செயலாளரான ஏர்வாடி சிராஜ் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றும் உள்ளாட்சி பதவியில் இருக்கிறார்.

இவ்வாறு நயவஞ்சக வேடமிடும் இந்த போலிதவ்ஹீத்வாதிகளை நாம் சட்டைசெய்ய வேண்டியதில்லை.


மனித நீதி பாசறை :


ஆர்ப்பாட்டம் கூடாது, போராட்டம் கூடாது, கொடி கூடாது, ஜனநாயகம் கூடாது, அபுஜஹல் தாக்க வந்த போது நபி(ஸல்)அவர்கள் கொடிபிடித்துக் கொண்டா இருந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடித்தவர்கள் இன்று கொடி, ஆர்ப்பாட்டம் என்று தங்களை மாற்றி 'அதிகாரம் மக்களுக்கே' எனும் கோஷத்துடன் வாக்களிக்கவும் இரவல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டார்கள். விடியல், மனித நீதி பாசறை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல பெயர்களில் இவர்கள் உலா வந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கப்படவில்லை. எனவே இதையும் விட்டுவிடுவோம்.

ஜமாஅத்தே இஸ்லாமி : எம்.என்.பி யின் கொள்கையில் முக்கால் பாகத்தைக் கொண்டிருக்கும் இவர்களும் பிற மாநிலங்களில் கொடிபிடித்து அரசியல் அதிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஒயிட் காலர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து அழைப்புபணி செய்வதால் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் சமுதாயத்திற்கு சாதக பாதகம் எதுவுமில்லை.

முஸ்லிம் லீக் :

அரசியலில் தனித்தன்மை இல்லாததால் இருப்பவனையும் இறந்தவனையும் வணங்கிக்கொண்டு மிகப்பெரிய இணைவைப்பை செய்து கொண்டிருக்கின்றனர். பதவிக்காக செயல்படும் இந்த பெயர்தாங்கி முஸ்லிம்களால் சமுதாயத்துக்கு எந்த நன்னையும் இல்லை.
பார்க்க : படம்

ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் இரு இயக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களும் சமுதாயத்திற்கு செய்த, செய்கின்ற நன்மைகள் என்ன? சமுதாயத்தின் பெயரைக்கூறி சமுதாய மக்களை எவ்வாறு வஞ்சித்தன, துரோகம் செய்தன என்பதை நாம் அடுத்ததாக காண்போம்.