Tuesday, April 12, 2011

தமுமுக கிளைகள் கலைக்கப் படுகின்றன. 2








ஏகனின் திருப்பெயரால்...


எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லை. முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேட்பாரின்றி வேதனைப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் நாம் ஒன்றிணைய வேண்டும், அதற்கு என்னவழி என யோசித்த தமுமுகவின் முன்னாள் நிர்வாகிகள், குணங்குடி ஹனீஃபா வைத்திருந்த 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' எனும் பெயரை தூசி தட்டி எடுத்து அதை வீரியப்படுத்தி முஸ்லிம்களை ஒன்றிணைத்தனர். அதன் காரணமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையத் தொடங்கின.


அதன் அமைப்பு நிர்ணய சட்டம்(பைலா)வில் பிரிவு(எ) ஆகிய 'கழகம் அரசியல் கட்சி சார்பற்றதாகவே செயல்படும். எந்த காலத்திலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகராட்சி, ஊராட்சி ஆகிய தேர்தல்களில் போட்டியிடாது' என்ற விதியின் படி பணிகளை செய்து கொண்டிருந்தது.




அதனுடைய பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் பதவி ஆசைக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அமைப்பை நடத்தவில்லை, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் ஒருபோதும் தேர்தலில் நிற்கமாட்டோம்' என்று அனைத்து மேடைகளிலும் முழங்கினர்.




மக்களும் அதை நம்பி அணி திரண்டனர். நாளடைவில் அதன் தற்போதைய நிர்வாகிகளுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டபோது இந்த அமைப்பை கட்டிக்காத்த பீ.ஜே, பாக்கர் உட்பட பலரை வெளியேற்ற திட்டமிட்டு தவ்ஹீத் பிரச்சாரத்தால் கப்ரு வணங்கிகள், தரீக்காவாதிகள், ஓதி பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பூசாரிகள், மரம், மட்டையை வணங்கும் முஸ்லிம்கள்(?!) எல்லோரும் தமுமுகவில் இணைய மறுக்கின்றனர் என்று கூறி தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றிவிட்டு தமுமுக எனும் இயக்கத்தை தற்போதைய நிர்வாகிகள் அபகரித்தனர். இவ்வாறு தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட இயக்கத்தையும் இடத்தையும் அபகரித்துவிட்டு அதிலிருந்து தவ்ஹீத்வாதிகள் துரத்தப்பட்டனர். ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலை போலானது.
அந்த சூழ்நிலையில் கூட இவர்கள் அரசியல் ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


2005 ஜூன் மாதத்தில் மக்கள் உரிமையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.


உமர் அலி, மஞ்சக்கொல்லை


?தமுமுக, முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று தேர்தலை சந்தித்தால் என்ன?!


முஸ்லிம் லீகும் தேசிய லீகும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள். தமுமுக தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.அந்த இரு லீக்குகளும் குறைந்த பட்சம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்பட முன்வந்தால், அவர்கள் இருவரையும் தமுமுக வழிநடத்தி அதிகமான தொகுதிகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யும்.இதனால் நமது வாக்குகள் சிதறாத நிலை ஏற்படும். அதிகமான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களாக உருவாகும் சூழலும் ஏற்படும். இதை இரண்டு லீக்குகளும் பரந்த மனதோடு சிந்திக்க வேண்டும்.
மக்கள் உரிமை மே 27 – ஜூன் 02, 2005 பக்கம் 14


அது மட்டுமின்றி 2006 –ல் கோவையில் நடந்த செயற்குழுவில் தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்று தீர்மானமாகவும் கொண்டுவந்தார்கள்.
பார்க்க மக்கள் உரிமை செப்டம்பர் 22 – 28, 2006 பக்கம் 1,2,14



அமைப்பின் கட்டுக்கோப்பை மீறினால் எதிர்காலத்தில் தமுமுக நிர்வாகியாகும் வாய்ப்பை இழந்து விட நேரிடும் என அறிவிப்பு செய்கிறார் ஹைதர் அலி.

இது அவருக்கு பொருந்தாதோ?

அதற்கு அடுத்த மாதம் தமுமுகவின் விதியை மீறி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கடலாடி ஒன்றிய செயலாளர் பாஹிர் அலியை பொறுப்பில் இருந்து நீக்கி சிக்கல் நகர நிர்வாகத்தையும் கலைத்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், சோதுகுடி கிளை தலைவரான அஹமது ஜலால் மற்றும் கீழாயூர் கிளை நிர்வாகி கனி ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கியது.



இவ்வாறு செய்தவர்கள் திடீரென தங்களுடைய அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தனர். அன்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் தேர்தலில் ஒரு போதும் போட்டியிட மாட்டோம்' என்றவர்கள் அதற்காக திட்டமிட ஆரம்பித்தனர். பின்னர் திமுகவிற்கு ஆதரவளித்து திமுகவால் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்பட்ட போது கூட சமுதாயத்தின் முதுகில் குத்தி திமுகவிற்கு வெண்சாமரம் வீசி, அதனால் வக்பு வாரியம் கிடைக்கப்பெற்று அதில் சுகம் கண்ட இவர்கள் பதவிகளுக்காக பறக்க ஆரம்பித்தனர்.


முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தவருக்கும் எனில் ஏற்கனவே பல கட்சிகளும் பல அமைப்புகளும் இருக்கின்றன. அனைவருக்காகவும் ஒரு அமைப்பு எனில் ஒரு முஸ்லிம் கூட இந்த அமைப்பில் இணைந்திருக்கமாட்டான். முஸ்லிம்களை வைத்து உயர்ந்து விட்டு இன்று அந்த முஸ்லிம்களையே எட்டி உதைக்கின்றனர். முஸ்லிம்களை மட்டும் வைத்திருப்பதால் நாம் பதவிக்கு வரமுடியாது என நினைத்த இவர்கள் மற்றவர்களையும் இணைக்க துவங்கினர். எனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'மக்கள் முன்னேற்ற கழகம்' என பெயர் சூட்டினர். அதுவும் பெயர் மாறி 'மனித நேய மக்கள் கட்சி' என்று தற்போது உலா வருகிறது.


அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறியவர்கள் எதற்கும் துணிவார்கள். அரசியல் லாபத்திற்காக சமுதாயத்தை விற்றவர்கள் இன்று திமுக, அதிமுக, சரத்குமாரின் சமுக, பாஜக என தாவித்தாவி சென்றபோதும் அனைவராலும் துரத்தி அடிக்கப்பட்டு வேறு வழியின்றி தனித்து நிற்கும் நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரத்திற்கொரு வாக்கு, நாளுக்கொரு பேச்சு பேசும் இவர்களைவிட பிற அரசியல் கட்சிகள் மேல் என தமுமுகவின் நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை தலைவரான அன்வர் பாட்ஷா மற்றும் கரீம், உசேன், ஷபீ, சாவேஸ் உட்பட பலர் தமுமுகவிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து யூனுஸ்கானுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.


பார்க்க படம் :


இது தொடக்கம் மட்டுமே!

No comments:

Post a Comment